2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மதுபானசாலையில் குழப்பம்; ஆறு கிரிக்கெட் வீரர்களிடம் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிக்க

Super User   / 2010 மே 18 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற இருபதுக்கு - 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது மதுபானசாலையில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் இந்திய வீரர்கள் அறுவரிடம் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிக்கை அனுப்பியுள்ளது.

இருபதுக்கு - 20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று படுதோல்வியடைந்த இந்திய கிரிக்கெட் அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. குறிப்பாக அணியின் தலைவர் தோணி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் சிலர் ரசிகர்களுடன் அடிதடி மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது.

இந்தப் பின்னணியில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் மேலாளராக செயற்பட்ட ரஞ்சிப் பிஸ்வால் கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில் வீரர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கியுள்ளார். மதுபானசாலையில் இந்திய வீரர்கள் செய்த குழப்பம் குறித்தும் அதில் விளக்கமாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்று கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜாகிர் கான், பியூஷ் சாவ்லா ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

முதலில் ஆறு பேரிடமும் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று அனைவருக்கும் கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் அறிக்கை அனுப்பினார்.

இந்த ஆறு பேரில் யுவராஜ் சிங், நெஹ்ரா, சர்மா, ஜடேஜா ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. இவர்களை அணியிலிருந்து நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக்கக் கூறப்படுகின்றது.

இந்த நான்கு பேரும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கான அணியில் சேர்க்கப்படமாட்டார்கள் என்றும் தெரிகிறது.

யுவராஜ் சிங், ரோஹித் சர்மா ஆகியோர் உடல் தகுதியுடன் இல்லை. இவர்களை அணியிலிருந்து நீக்கியாக வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Alga Wednesday, 19 May 2010 05:20 PM

    இவர்களை உடனடியாக அணியில் இருந்து ஒரு வருடத்திற்கு இடை நிறுத்தம் செய்ய வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--