2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே மரே முடிவு

Shanmugan Murugavel   / 2016 மே 30 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதா, இல்லையா என்பது தொடர்பான முடிவை, மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே எடுக்கவுள்ளதாக, நடப்பு ஒலிம்பிக் சம்பியனான அன்டி மரே தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த ஒலிம்பிக் போட்டிகளில், சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரை, 6-2, 6-1, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து, அன்டி மரே சம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

இந்நிலையில், இம்முறை இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், சீகா வைரஸ் தொடர்பான அச்சம் காணப்படுகின்ற நிலையில், அதில் பங்குபற்றுவது தொடர்பாக, முன்னணி வீரர்களிடத்தில் தயக்கம் காணப்படுகிறது.

இந்நிலையில், விஞ்ஞானிகள், வைத்தியர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனக் குழுவினர் இணைந்து, இத்தொடரை அங்கு நடத்துவது, நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அன்டி மரே, 'சில வைத்தியர்களுடன் நான் கலந்துரையாடுவேன், அவர்களது அறிவுரை என்னவென்று பார்ப்பேன்" எனத் தெரிவித்தார்.

'அங்கு விளையாடுவது குறித்து நான் திட்டமிடுகிறேன், ஆனால் அங்குள்ள சரியான நிலைவரம் என்னவென்று தெரியவில்லை. முடிவொன்றை எடுப்பதற்கு முன்னர், இன்னும் அதிகமான தகவல்களைப் பெற விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .