Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்குமிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சென்றுள்ள நிலையில், அவ்வணியின் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக, இலங்கையின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன செயலாற்றுகிறார்.
'ஜெயவர்தன மிகவும் சிறப்பானவர். இலகுவாக அணுகக்கூடியவர். அவருக்கெதிராக விளையாடிய அதிர்ஷ்டத்தையும் கொண்டிருக்கிறேன், ஆகவே என்னைப் பற்றி அவருக்குச் சிறிது தெரிந்திருந்தது. அவரது அனுபவம் மிகவும் பெறுமதியானது. எல்லா வீரர்களும் அவருடன் இணைந்து நிறை நேரத்தைச் செலவிடுகின்றனர்" என, இங்கிலாந்து அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இறுதியாக பாகிஸ்தானை ஆசியாவில் வைத்துச் சந்தித்தபோது, 0-3 என்ற மோசமான தொடர் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதே இங்கிலாந்தின் மிகப்பெரிய சவாலாக எண்ணப்படுகின்றது.
5 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Oct 2025