Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 10 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிராக இடம்பெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் டினேஷ் ராம்டின், அந்த முடிவு குறித்து எதுவும் செய்ய முடியாது எனவும், அந்த முடிவை ஏற்கத் தான் வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இத்தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம், இதுவரை அறிவிக்கப்படாத போதிலும், அக்குழாமிலிருந்து தான் நீக்கப்படுவதாக. தேர்வுக்குழுவின் புதிய தலைவரான கோர்ட்னி பிறெளண் தெரிவித்ததாக, ராம்டின் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கருத்துத் தெரிவித்துள்ள ராம்டின், கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக, எந்தவித அழுத்தத்தையும் தான் எதிர்கொண்டிருக்கவில்லை எனவும், எனவே சிறிது ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்தார். எனினும், உயர் அதிகாரத்தில் இருப்போரின் முடிவுகளை ஏற்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், கிரிக்கெட்டை தான் உரிமைப்படுத்தி இருக்கவில்லை எனவும், பிராந்திய நான்கு-நாள் போட்டிகளில் பங்குபற்றி, மீண்டும் சர்வதேச அணியில் இடம்பெற முயல வேண்டுமெனத் தெரிவித்தார்.
‘கடந்த ஆண்டுகளில் சிறப்பாகச் செயற்பட்ட சிரேஷ்ட வீரராக நான் கணிக்கப்படவில்லை போலிருக்கிறது. ஆனால், இதேபோன்று முன்னமும் நடத்துள்ளது. அதிலிருந்து மீண்டு, நான் சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago