2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மீண்டும் மெஸ்ஸி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 17 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயம் காரணமாக ஓய்வெடுக்க வேண்டியேற்பட்ட பார்சிலோனா அணியின் லியனொல் மெஸ்ஸி, ஏழு வாரங்களில் முதன்முறையாக, பார்சிலோனா அணியுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

செப்டெம்பர் 26ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில், முழங்கால் உபாதைக்குள்ளான மெஸ்ஸி, அதன் பின்னர் போட்டிகளில் ஈடுபட முடிந்திருக்கவில்லை.

பார்சிலோனா அணிக்கும் றியல் மட்ரிட் அணிக்குமிடையிலான மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போட்டி, நவம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையிலேயே, அப்போட்டிக்குத் தகுதிபெறும் எதிர்பார்ப்புடன் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

போட்டிகளில் மெஸ்ஸி பங்குபற்றாதபோது, லூயிஸ் சுவரேஷ், நேமர் ஆகியோர் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், மெஸ்ஸியின் உள்ளடக்கம், பார்சிலோனாவுக்கு மேலும் பலத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

லா லிகா தொடரின் புள்ளிகளின் பட்டியலில், பார்சிலோனா அணி முதலிடத்தில் காணப்படுகின்றது. இரண்டாமிடத்தில், 3 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள றியல் மட்ரிட் அணி காணப்படுகிறது. மூன்றாமிடத்தில், மேலுமொரு புள்ளி குறைவாகப் பெற்றுள்ள அத்லெட்டிகோ மட்ரிட் அணி காணப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .