2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

முதலிடம் தான், ஆனால் 'இன்னும் முன்னேற வேண்டியுள்ளது'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 08 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் காணப்படுகின்ற போதிலும், அவ்வணி அடைய வேண்டிய நிலைமைக்கு இன்னமும் அதிகம் செல்ல வேண்டியுள்ளதாக, அவ்வணியின் பயிற்றுநர் டெரன் லீமன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இடம்பெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, டெஸ்ட் முதலிடத்தைக் கைப்பற்றியது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த டெரன் லீமன், தாங்கள் நினைத்ததை விட வேகமாக விருத்தியடைந்துள்ளதாகவும், ஆனால் அந்நிலைமை மாறக்கூடுமெனவும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுமெனவும் தெரிவித்தார்.

நிரூபிக்க வேண்டியவை இன்னமும் இருப்பதாகத் தெரிவித்த அவர், இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள தொடர்களை, முக்கிய தொடர்களாகக் குறிப்பிட்டார். இந்திய உப கண்டத்தில் வென்று காட்ட வேண்டியிருப்பதாகத் தெரிவித்த அவர், அதை இலங்கையில் ஆரம்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

முன்னைய ஆஷஸ் தொடரின் பின்னர் மைக்கல் கிளார்க், மிற்சல் ஜோன்சன், றயன் ஹரிஸ், பிரட் ஹடின், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதுடன், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஷேன் வொற்சன் விலகினார். இவ்வாறு அதிகளவிலான வீரர்களின் ஓய்வின் பின்னர், அணி மீண்டு, சிறப்பாகச் செயற்பட்டுள்ளமை சிறப்பானது எனவும் டெரன் லீமன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .