2021 மே 06, வியாழக்கிழமை

மேற்கிந்திய தீவுகளின் பயிற்சிப் போட்டி மழையால் ஒத்திவைப்பு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கான பயிற்சிப் போட்டி, ஒரு நாளால் பின்தள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் காணப்படும் மழைச் சூழ்நிலை காரணமாகவே இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இப்போட்டி இடம்பெறத் திட்டமிடப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஆரம்பிக்கவிருந்தது.

எனினும், கொழும்பில் பெய்துவரும் மழை காரணமாக, 2 நாட்கள் கொண்ட இந்தப் போட்டியை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், பயிற்சிப் போட்டியானது 11ஆம் திகதியே நிறைவடையுமென்பதால், இரு போட்டிகளுக்குமிடையில் வெறுமனே இரண்டு நாட்கள் மாத்திரமே இடைவெளி காணப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .