2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மெஸ்ஸியைத் தக்க வைக்க நம்பிக்கை

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான லியனல் மெஸ்ஸியை, தொடர்ந்தும் அவ்வணியிலேயே வைத்திருப்பதற்காக பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத போதிலும், அடுத்தாண்டு ஆரம்பத்தில், கழகத்துடனான தனது எதிர்காலத்தை, மெஸ்ஸி உறுதி செய்வார் என, அக்கழகம் தெரிவித்துள்ளது.

சேர்ஜியோ புஷ்கெட்ஸ், ஜேவியர் மஷாரானோ, நெய்மர் ஆகியோரைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில், லூயிஸ் சுவரஸ், பார்சிலோனா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே, மெஸ்ஸி தொடர்பாகக் கேள்விகள் எழுந்தன.

மெஸ்ஸிக்கும் பார்சிலோனா கழகத்துக்கும் இடையில், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், 2018ஆம் ஆண்டு, இந்த ஒப்பந்தம், நிறைவடையவுள்ளது. எனவே தான், புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள், விரைவிலேயே ஆரம்பிக்கவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--