2021 ஜனவரி 27, புதன்கிழமை

யுனைட்டெட்டுக்குத் திரும்புகிறார் ஸாகா?

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான கிறிஸ்டல் பலஸின் முன்களவீரரான வில்ஃபிரைட் ஸாகாவை, அடுத்த பருவகாலத்தில் மீளக் கைச்சாத்திடுவதற்கு இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐவரிகோஸ்ட் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்களவீரருமான வில்ஃபிரைட் ஸாகா, 2013ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் வீரராகவே இருந்தபோதும், கிறிஸ்டல் பலஸுக்கும், கார்டிஃப் சிற்றிக்கும் கடனடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இரண்டு போட்டிகளிலேயே மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்காக விளையாடியிருந்தார்.

இந்நிலையில், 26 வயதான வில்ஃபிரைட் ஸாகாவை 70 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .