2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

யாசீரின் பங்குபற்றுகை குறித்து நம்பிக்கை

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா பங்குபற்றுவார் என்பது தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்பதாக, அவ்வணியின் பயிற்றுநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி, பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக, பிறிஸ்பேணில் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இத்தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த யாசீர் ஷா, முதுகு உபாதைக்கு உள்ளானதால், பயிற்சிப் போட்டியில் பங்கெடுத்திருக்கவில்லை என்பதோடு, முதலாவது போட்டியில் பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் காணப்பட்டது. எனினும், அவர் குணமடைந்து விட்டார் என நம்புவதாகத் தெரிவித்த மிக்கி ஆர்தர், அவர் பங்குபற்றுவார் என நம்பிக்கை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நம்பமுடியாத புறச்சுழல் பந்துவீச்சாளர் என அவரை வர்ணித்த ஆர்தர், அவுஸ்திரேலிய இரசிகர்கள், அவரைப் பார்க்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதுவரை 20 டெஸ்ட்களில் 27.89 என்ற சராசரியில் 116 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஷா, அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய போது, 17க்கும் சற்று அதிகமான சராசரியில், 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .