Shanmugan Murugavel / 2016 மார்ச் 28 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய உலக சம்பியன்களான ஜேர்மனியை, வெய்ன் ரூனி இல்லாமலேயே இளம் இங்கிலாந்து அணி வென்றிருந்தாலும் எதிர்வரும் யூரோ 2016காண திட்டங்களில் பெரிய பங்கு ரூனிக்கு இருப்பதாக இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ரோய் ஹொட்க்ஸன் தெரிவித்துள்ளார்.
பேர்லினில் கடந்த சனிக்கிழமை (27) இடம்பெற்ற சிநேகபூர்வ ஆட்டத்தில் முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் தலைவரும் மன்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்தாட்டக் கழகத்தின் முன்கள வீரருமான வெய்ன் ரூனி பங்கேற்றிருக்காத நிலையில், இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்த இங்கிலாந்து, பின்னர், 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக தெரிவான டொட்டேன்ஹாம் அணியின் 19 வயதான வீரரான டெலே அல்லி, இங்கிலாந்து அணி சார்பாக இப்போட்டியில் முதலாவது கோலைப் பெற்ற சக கழக வீரரான 22 வயதான ஹரி கேனுடன் இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தவிர, இரண்டாவது கோலைப் பெற்ற லெய்செஸ்டர் கழகத்தின் ஜேமி வர்டியும் அணியில் ரூனியின் இடத்தை கேள்விக்குறியாகியிருந்தனர்.
எனினும் கருத்து தெரிவித்த ஹொட்க்ஸன், நான் மீளக் கூறவேண்டும். வெய்ன் எங்களது தலைவர், கடந்த இரண்டு வருடங்களாக அணியை சிறப்பாக அவர் வழிநடத்தியுள்ளார் எனத் தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago