Shanmugan Murugavel / 2016 மார்ச் 23 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐரோப்போ முழுவதுமே பாதுகாப்புத் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ள போதிலும், யூரோ 2016 போட்டிகள், திட்டமிடப்பட்டபடி இடம்பெற வேண்டுமென, வேல்ஸ் கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் கிறிஸ் கோல்மான் தெரிவித்துள்ளார்.
யூரோ 2016 போட்டிகள், இவ்வாண்டு ஜூன் 10ஆம் திகதி ஆரம்பித்து ஜூலை 10ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன. இப்போட்டிகள், பிரான்ஸில் இடம்பெறவுள்ளன.
எனினும், பிரான்ஸில் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பெல்ஜியத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆகியன, இப்போட்டிகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
எனினும் கருத்துத் தெரிவித்த கிறிஸ் கோல்மான், போட்டிகள் நடப்பதையே அனைவரும் விரும்புவதாகத் தெரிவித்ததோடு, மக்கள் விரும்புவதை நடத்துவதை, அனைவரும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை, மிகவும் கொடூரமானது என வர்ணித்த அவர், எனினும், போட்டிகளை நிறுத்துவதன் மூலமாக, தாக்குதலாளிகள் வெல்வதற்கு இடமளிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்தார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago