2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ரஷ்யா மீதான தடை நீடிப்பு

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஆதரவுடனான ஊக்கமருந்துப் பாவனை இடம்பெற்ற குற்றச்சாட்டில், சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவால் ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருந்த தடை, மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மீதான இந்தத் தடை, இவ்வாண்டு ஜூலையில் விதிக்கப்பட்டது. இந்தத் தடையே தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது, முழுமையான தடை விதிக்கப்பட வேண்டுமென, ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான உலக முகவராண்மை பரிந்துரைத்திருந்தது. ஆனால் தடகள வீரர்களும் பளுதூக்கல் வீரர்களுமே தடை செய்யப்பட்டனர். இந்தத் தடை காரணமாக, 389 வீரர்களை இம்முறை ஒலிம்பிக்கில் பங்குபற்றத் தெரிவுசெய்திருந்த ரஷ்யா, 271 பேரையே போட்டிகளில் பங்குபற்றுவதற்கு முடிந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .