Shanmugan Murugavel / 2016 மார்ச் 15 , மு.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த திங்கட்கிழமை (14) இடம்பெற்ற போட்டியில் லெய்செஸ்டர் சிற்றி அணி வெற்றி பெற்றுள்ளது.
லெய்செஸ்டர் சிற்றி, நியூகாசில் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை, போட்டியின் 25ஆவது நிமிடத்தில் ஷின்ஞ்சி ஒகஸாகி பெற்றிருந்தார்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியையடுத்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 63 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலுள்ள லெய்செஸ்டர் சிற்றி, தனக்கும் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பேர் அணிக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை ஐந்தாக அதிகரித்துக் கொண்டது.
2 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Jan 2026