2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

வல்ட்டேரி போத்தாஸூம் மெர்சிடிஸுக்கு கிடைக்கார்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனின் சக வீரராக, ஓய்வுபெற்றுள்ள தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான ஜேர்மனியின் நிக்கோ றொஸ்பேர்க்கை பிரதியீடு செய்வதற்கான மெர்சிடிஸ் அணியின் முதற் தெரிவாக, வில்லியம்ஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸே காணப்படுகின்றார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தத்திலிருந்து போத்தாஸை விடுவிக்கும் ஆரம்பகட்ட கோரிக்கையை வில்லியம்ஸ் அணி நிராகரித்துள்ளது.

போத்தாஸை விடுவிப்பதுக்கு பதிலாக, வில்லியம்ஸின் இயந்திரத்துக்கான தொகையை 10 மில்லியன் யூரோ அளவில் வழங்குவதான (மொத்தத்தின் அரைவாசியை விட அதிகம்) கோரிக்கையையே மெர்சிடிஸ் அணியின் பிரதம நிறைவேற்றதிகாரியான டொட்டோ வோல்ஃப் முன்வைத்திருந்தார். தவிர, மெர்சிடிஸ் அணியின் மேலதிகமான ஓட்டுநரான பஸ்கால் வியர்லைனையும், போத்தாஸின் இடத்தில் பயன்படுத்தலாம்  என்ற தெரிவையும் வழங்கியிருந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .