2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிந்த இலங்கை - பாகிஸ்தான் போட்டி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான இளைஞர் டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, சரித் அசலங்கவின் இரட்டைச் சதத்தின் (200) துணையோடு 347 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஷடப் கான் 6, சாய்ப் அலி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், உமைர் மசூத்தின் சதத்தின் (102) உதவியுடன் 209 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அசித்த பெர்ணான்டோ, லஹிரு குமார, திலான் நிமேஷ் மூவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மீண்டும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, அவிஷ்க பெர்ணான்டோ (64), ஷம்மு அஷன் (ஆ.இ 54) ஆகியோரின் அரைச்சதங்கள், சலிந்து உஷானின் 49 ஓட்டங்களின் துணையோடு 3 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.

350 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 40.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, போட்டி முடிவுக்கு வந்தது. அவ்வணியின் ஸீஷன் மலிக், 55 ஓட்டங்களைப் பெற்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .