2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

ஷரபோவாவுக்கு ‘வைல்ட் கார்ட்’

Editorial   / 2017 மே 24 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு ஓகஸ்டில் இடம்பெறவுள்ள ரொஜர்ஸ் கிண்ணத் தொடரில், ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு, ‘வைல்ட் கார்ட்’ தெரிவு வழங்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பாவனை காரணமாக, 15 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட ஷரபோவா, தற்போது மீண்டும் போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்துள்ளார்.

இதில், பெண்கள் டென்னிஸ் சங்கத் தொடர்களில் மூன்றில், அவருக்கு ‘வைல்ட் கார்ட்’ வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில், அவருக்கு ‘வைல்ட் கார்ட்’ வழங்கப்படாமை, அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையிலேயே, டொரன்டோவில் நடைபெறும் ரொஜர்ஸ் கிண்ணத்தில், அவருக்கு ‘வைல்ட் கார்ட்’ வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .