2021 மார்ச் 01, திங்கட்கிழமை

‘ஷாஸ்திரிகளும் கும்ப்ளேக்களும் வருவார்கள், போவார்கள்’

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் தொடர்பில் அண்மையில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பின்னர், அப்பிரச்சினைகள் தீர்ந்துள்ள நிலையில், அவற்றைத் தாண்டி, புதிய பார்வையைச் செலுத்தவுள்ளதாக, புதிய பயிற்றுநர் ரவி ஷாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் பயிற்றுநராக இருந்த கும்ப்ளேயை, அணித்தலைவர் விராத் கோலி உள்ளிட்ட சில வீரர்கள் விரும்பாத நிலையில், பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார். அதன் பின்னர், பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், ஷாஸ்திரி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இலங்கைக்குப் புறப்பட முன்னர் கருத்துத் தெரிவித்த ஷாஸ்திரி, பயிற்றுநர் தெரிவு இடம்பெற்ற கடந்த 2 வாரங்களுக்குள், மிக அதிகமானளவு, மனரீதியாகப் பக்குவமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

“கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த அணி சிறப்பாகச் செயற்பட்டுள்ளது. ஏனையோரை விட, அவர்களுக்குத் தான் அந்தப் பெருமை சேர வேண்டும். இந்த ரவி ஷாஸ்திரிகளும் அனில் கும்ப்ளேக்களும், வருவார்கள், போவார்கள். இந்திய கிரிக்கெட்டின் அடிப்படை, அப்படியே இருக்கும்.

“இன்று அவர்கள் [டெஸ்ட் தரப்படுத்தலில்] முதலிடம் என்றால், அது, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள். கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் செய்த விடயங்கள் தான். எங்களைப் போன்றவர்கள் வருவார்கள், போவார்கள்” என்று தெரிவித்தார்.

பயிற்றுநராக இருந்த கும்ப்ளே, வீரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்தார் என்பதே, சில வீரர்கள் அவரை வெறுப்பதற்கான காரணமாக அமைந்தது என்று கூறப்பட்டது. ரவி ஷாஸ்திரி, அவ்வாறில்லாமல், வீரர்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குபவராகக் கருதப்படுகிறார். அவரது கருத்தும், அதனையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .