2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஷெபீல்ட் ஷீல்ட்: இறுதிப் போட்டியில் தெற்கு அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் முதற்தரப் போட்டித் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு, தெற்கு அவுஸ்திரேலிய அணி தகுதிபெற்றுள்ளது. மேற்கு அவுஸ்திரேலிய அணிக்கும் குயீன்ஸ்லாந்து அணிக்குமிடையிலான போட்டியில் குயீன்ஸ்லாந்து அணி தோல்வியடைந்ததையடுத்தே, தெற்கு அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குயீன்ஸ்லாந்து அணி 147 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கு அவுஸ்திரேலிய அணி380 ஓட்டங்களைக் குவித்தது. இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 233 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் துடுப்பெடுத்தாடிய குயீன்ஸ்லாந்து, 227 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த முடிவைத் தொடர்ந்து, 10 போட்டிகளில் விளையாடிய 49.63 புள்ளிகளைப் பெற்றுள்ள தெற்கு அவுஸ்திரேலிய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. 9 போட்டிகளில் விளையாடி முறையே 46.62, 44.13 புள்ளிகளைப் பெற்றுள்ள விக்டோரியா, நியூ சௌத் வேல்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள போட்டியில், அதிக புள்ளிகளைப் பெறும் அணி, இறுதிப் போட்டியில் தெற்கு அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .