2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஸ்கொட்லாந்திடம் தோற்றது இலங்கை

Editorial   / 2017 மே 22 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்கொட்லாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கிடையில், இங்கிலாந்தின் பெக்கென்ஹம்மில், நேற்று (21) இடம்பெற்ற பயிற்சி ஒருநாள் போட்டியில், 7 விக்கெட்டுகளால், ஸ்கொட்லாந்திடம் இலங்கை தோற்றது.  

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டினேஷ் சந்திமால் 79 (105), சாமர கப்புகெதர 71 (50), குசல் பெரேரா 57 (59) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அலஸ்டைர் இவான்ஸ், ஸ்டுவர்ட் விட்டிங்காம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் சோல் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.  

பதிலுக்கு, 288 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து, 42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையிலேயே வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கைல் கோட்ஸியர் 118 (84), மத்தியூ குறோஸ் ஆட்டமிழக்காமல் 106 (123) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லக்‌ஷன் சந்தகான், அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், திஸர பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.  

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டாவது பயிற்சி ஒருநாள் போட்டி, நாளை இடம்பெறவுள்ளது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .