2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

முன்னாள் 100 M உலக சாதனையாளருக்கு தடை

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜமைக்காவின் 100 மீற்றர் ஓட்ட வீரர் அஷபா பவல் 18 மாத தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தடை செய்யபட்ட ஊக்க மருந்தை பாவித்தார் என்ற குற்றத்தின் அடிபப்டையில் இவர் தடை செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் ஜமைக்கா சம்பியன்சிப் போட்டிகளின் போது செய்யப்பட்ட பரிசோதனையில் இவரின் குற்றம் அண்மையில் நிரூபிக்கப்பட்டது. இந்த தடையின் மூலம் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநல வாய நாடுகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இவரின் தடை முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2008 ஆம் ஆண்டு வரை உலகின் வேகமான வீரர் என்ற சாதனை இவர் வசம் இருந்தது. 9.72 செக்கன்கள் என்பது இவரின் சாதனை. இந்த சாதனை ஐந்தாவது சாதனையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--