2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஷேவாக், கோலி அதிரடி; உலக கிண்ண முதல் போட்டியில் இந்தியா வெற்றி

Super User   / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 87  ஓட்டங்களால் இந்திய அணி சற்றுமுன் தோற்கடித்தது.

குழு 'பி' இல் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளுக்கிடையிலான இப்போட்டி பங்களாதேஷின் ஸ்ரீ பங்களா தேசிய கிரிக்கெட் அரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.  அதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட இந்திய அணி 370 .ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 28 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரன் அவுட்டானார்.  இதன் மூலம் இத்தொடரில் ஆட்டமிழந்த முதல் வீரரானார் சச்சின்.

எனினும் மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான வீரேந்தர் ஷேவாக் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 140 பந்துவீச்சுகளில் 175 ஓட்டங்களைக் குவித்தார். 5 சிக்ஸர்கள் 14 சிக்ஸர்கள் என்பனவும் இவற்றில் அடங்கும். இத் தொடரில் முதல் சதத்தைக் குவித்த வீரர் எனும் பெருமையை ஷேவாக் பெற்றார்.

கௌதம் காம்பீர் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 4 ஆவது வரிசை வீரராக களமிறங்கிய வீரட் கோலி 83 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் 8 பௌண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார்.

யூஸுப் பதான் 8 ஓட்டங்களைப் பெற்றார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 59 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் 70 ஓட்டங்களையும் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்வீச்சாளர்களில் முனாவ் பட்டேல் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். ஸஹீர்கான் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிறப்பாட்டக் காரர் விருதை வீரேந்தர் ஷேவாக் பெற்றுக்கொண்டார்.


  Comments - 0

  • jesuthasan Sunday, 20 February 2011 11:56 PM

    nanettrukkolkiren

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .