2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவ்ரிடி ஓய்வு

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சஹீட் அவ்ரிடி இன்று அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில்  இன்று வெள்ளிக்கிழமை முடிவுற்ற அவுஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 150 ஓட்டங்களால் தோல்வியுற்ற பின்னர் அவ்ரிடி இந்த அறிவிப்பை விடுத்தார்.

ஆஸி. – பாக.; அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை ஹெடிங்லே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுவே தனது கடைசி டெஸ்ட் போட்டியாக அமையும் என அவ்ரிடி கூறினார்.

அதேவேளை, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவ்ரிடி தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவ்ரிடியின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால், புதிய அணித்தலைவராக தற்போதைய உபதலைவர் சல்மான் பட் நியமிக்கப்படுவாரா என்பதை உறுதியாக கூற முடியாது என பாக். கிரிக்கெட் சபைத்தலைவர் இஜாஸ் பட் அறிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--