2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

முரளியின் பிரியாவிடை ‘டெஸ்ட்’

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பல தடைகளைத் தாண்டி தனக்கென தனிமுத்திரை பதித்திருக்கும் முத்தையா முரளிதரன் இன்று நடைபெறவுள்ள இலங்கை - இந்திய டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ளார்.

792 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையுடன் களமிறங்கும் முரளி, 800 விக்கெட்டுகளை வீழ்த்தியே ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்று நடைபெறவுள்ள போட்டி வரலாற்றிலும் இடம்பிடிக்கவுள்ளது.

உலகின் அதிக ஓட்டங்களை குவித்திருக்கும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் - உலகின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முத்தையா முரளிதரனின் இறுதிப்போட்டியில் களத்தில் சந்திக்கவுள்ளார். இப்படியான சந்தர்ப்பம் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மாத்திரமே நிகழ்ந்திருக்கிறது.

1887ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஆதர் ஸ்ரௌஸ்பெரி (Arthur Shrewsbury)- அவுஸ்திரேலியாவின் பிரட் ஸ்பெப்பொத்தை (Fred Spofforth) களத்தில் சந்தித்தார். இது முதலாவது சந்தர்ப்பம். இரண்டாவதாக, மேற்கிந்தியாவின் பிரைன் லாரா - அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னினை 2005ஆம் ஆண்டு ஓய்வுபெறமுன் களத்தில் சந்தித்தார். இப்பொழுது வரலாற்றில் மூன்றாவது தடவையாக இமயமொன்று ஓய்வுபெறும் போட்டியில் இரு சிகரங்கள் களத்தில் சந்திக்கவுள்ளன.

தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் முத்தையா முரளிதரனுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இன்று விருது வழங்கி கௌரவிப்பதையும் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார கரகோஷம் செய்வதையும் படத்தில் காணலாம்.  (படம்: ராய்ட்டர்ஸ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--