2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கொழும்பு ரட்ணம் கழகத்தை வீழ்த்திய திருமலை புனித அந்தோனி கழகம்

Super User   / 2010 ஜூலை 18 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை  புனித அந்தோனி விளையாட்டுக் கழகத்திற்கும், கொழும்பு ரட்ணம் கழகத்திற்கும் இடையே மெக்கெய்சர் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  கால்பந்தாட்டப் போட்டியில் புனித அந்தோனியார் விளையாட்டுக் கழகம்  வெற்றி பெற்றது.
 
மாலை 4.00 மணிக்கு போட்டி ஆரம்பமானது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரியவதி கலபதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இடைவேளைவரை இரு அணிகளும் கோல்கள் எதையும் போட்டிருக்கவில்லை.  இடைவேளையின் பின்னர்  19வது நிமிடத்தில் புனித அந்தோனி விளையாட்டுக் கழகத்தின் முன்கள வீரரான  றிச்சர்ட் அடித்த அபாரமான கோல் போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கிக் கொண்டது.
 
ரட்ணம் கழக வீரர்களும் சளைக்காது விளையாடிய போதிலும் அவர்களால் கோல்கள் எதனையும் அடிக்க முடியவில்லை.
 
இப்போட்டியில் சிறந்த வீரர்களாக ரட்ணம் கழகத்தைச் சேர்ந்த நில்பௌர், புனித அந்தோனி விளையாட்டுக் கழக வீரர் றிச்சர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை பொலிஸ் கால்பந்தாட்ட அணியின் வீராங்கனைகளும், கொழும்பு கால்பந்து மத்தியஸ்தர் சங்கத்தின் உறுப்பினர்களுமான சானிகா ராஜபக்ஸ, மானெல் ஐராங்கனி, புஸ்பா ஏக்கநாயக்கா ஆகியோர் போட்டி மத்தியஸ்தர்களாக பணியாற்றினர்.

வெற்றி பெற்ற  புனித அந்தோனி கழகத்திற்கு திருகோணமலை லயன்ஸ் கழக ஆளுநர் ப.ஜனரஞ்சன் வெற்றிக்கிண்ணம் வழங்குவதையும்,  கொழும்பு ரட்ணம் கழகத்திற்கு லயன்.ப.சுரேஷ் நினைவுச்சின்னம் வழங்குவதையும், சிறந்த வீரர்களாக தெரிவு செய்யப்பட்ட ரட்ணம் கழக வீரர் அ.மு.நிளொபருக்கு  புனித அந்தோனி கழக தலைவரும், கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான கிளமன்ட் டி சில்வா வெற்றிக்கிண்ணம் வழங்குவதையும்,  புனித அந்தோனி கழக வீரர் ஆர்.றிச்சர்ட்டுக்கு  ரட்ணம் கழக தலைவர் ஹேர்லி  சில்வேரா வெற்றிக்கிண்ணம் வழங்குவதையும்
புனித அந்தோனி கழகம் வெற்றிக்கிண்ணத்துடன்  மத்தியஸ்தர்கள், மற்றும் நிர்வாகிகளுடன்  காணப்படுவதையும் படங்களில் காணலாம்.

படங்கள்: சி.சசிகுமார் திருக்கோணமலை  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--