Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கான குறியீட்டுப் பாடல் புதுடில்லியில் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
இது குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்:-
பொதுநலவாய போட்டி தொடர்பாக நடைபெற்ற அமைச்சர்களின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் இசைக்கப்பட்டதுடன், அமைச்சர்கள் மட்டத்தில் கொள்கையளவில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இன்னும் 10 தினங்களில் பாடல் இறுதிப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்பதுடன், பொதுநலவாய போட்டியின் ஆரம்ப விழாவில் இறுதி நிகழ்வாக இந்த பாடல் ஒலிபரப்பப்படும் என்றார்.
புதுல்லியில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்வாகதம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டபோது, இந்தப் பாடலை மகாத்மா காந்திக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று ரஹ்மான் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
6 hours ago
8 hours ago