2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் குமார் சங்கக்கார முதலிடம்

Super User   / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை  கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார முதலிடத்தில் உள்ளார்.

இன்று வெளியிடப்பட்ட இப்பட்டியலின்படி, இந்திய அணியின் வீரேந்திர ஷேவாக் தொடர்தும் இரண்டாமிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் கிளார்க் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இதேவேளை பந்து வீச்சாளர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் அமீர் தனது கிரிக்கட் வாழ்வில் முதன் முறையாக 17 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துடனான 3 ஆவது டெஸ்;ட்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 49 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்  இரண்டாம் இன்னிங்ஸில் 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இபோட்டியின் சிறப்பாட்டக்காரராக அமீர்  தெரிவானமை குறிப்பிடத்தக்கது. இதையடு;த்து பந்து வீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் அவர் 14 இடங்கள் முன்னேறி 17 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

தரப்படுத்தல் பட்டியலில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த சுவேன் தரப்படுத்தலில் ஒரு இடம் முன்னேறி மீண்டும் தமது இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

 இதேவேளை, சகல துறை ஆட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதல் 5 இடங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சகலதுறை வீரரான ஜக்; கலிஸ் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--