Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்டநிர்ணய சதிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துடான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 225 ஓட்டங்களால் படுதோல்வியைத் தழுவியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து அணி 3-1 விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 446 ஓட்டங்களைப் பெற்றது. மூன்றாவது நாளான நேற்று பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நான்காவது நாடான இன்று அவ்வணி 74 ஓட்டங்களுடன் சுருண்டது. அணித்தலைவர் சல்மான் பட் 26 ஓட்டங்களைப் பெற்றார். கம்ரன் அக்மல் 13 ஓட்டங்களையும் அஸார் அலி 10 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியில் வேறு எவரும் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெறவில்லை.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் கிரஹம் ஸ்வான் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஸ்டீவன் பின் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
'பொலோ ஒன்' நிலைக்குத் தள்ளப்பட்ட பாகிஸ்தான் அணி இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
உமர் அக்மல் 68 பந்துவீச்சுளில் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் 147 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான் அணி.
இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்துவீசிய கிரஹம் ஸ்வான் 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டை வீழ்த்தினார்.
169 ஓட்டங்களைப் பெற்றதுடன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஸ்டுவர்ட் புரோட், நான்காவது போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
இச்சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமிர், இங்கிலாந்து வீரர் ஜொனதன் ட்ரொட் ஆகியோர் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago