2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் லீக் சுற்றுப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் சம்பியன்

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ட்வென்டி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சென்னை சுப்பர்கிங்ஸ் அணி சம்பியனாகியது.


ஞாயிறன்று ஜொஹான்னஸ்பர்க்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவின் ஈஸ்டர்ன் கேப் வாரியர்ஸ் அணியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களைப் பெற்றது.
 

அணித்தலைவர் டேவி ஜேக்கப்ஸ் 21 பந்துகளில்  34 ஓட்டங்களையும், தைஸன் கிறேக் தைஸன் 18 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
 

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


வெற்றி பெறுவதற்கு 129 ஓட்டங்கள் தேவையான நிலையில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில் முரளி விஜய்யும் மைக் ஹஸியும் முதல் விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களைப் பெற்று உறுதியான அடித்தளம் அமைத்தனர்.


முரளி விஜய் 53 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார். மைக் ஹஸி 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51  ஓட்டங்களைப் பெற்றார். சுரேஷ் ரெய்னா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி 12 பந்துகளில் ஆட்டமிக்காமல் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனால் 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி.


இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக் காரராக முரளி விஜய் தெரிவானார்.  சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவானார்.


இப்போட்டியில் சம்பியனாகிய சுப்பர் கிங்ஸ் அணிக்கு 25 லட்சம் அமெரிக்க டொலர் ஜக்பொட் பரிசு வழங்கப்பட்டது. வாரியர்ஸ் அணி 13 லட்சம் டொலர்களைப் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--