Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய -இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கிபொன்டிங்கும் இந்திய பந்துவீச்சாளர் ஸஹீர்கானும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரிக்கி பொன்டிங் 71 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் சுரேஷ் ரெய்னாவினால் ரண் அவுட்டாக்கப்பட்டார். அதையடுத்து பொன்டிங் ஆடுகளத்திலிருந்து வெளியேறியபோது அவருக்கும் ஸஹீர்கானுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.
நடுவர் பில்லி போடன் தலையிட்டு, இருவரையும் அமைதிப்படுத்தினார்.
இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமுடிவில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
சண்டிகார் மாநிலத்தின் மொஹாலியில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை 13 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் இழைந்தது.
சைமன் கட்டிச் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷேன் வட்ஸனும் அணித் தலைவர் ரிக்கி பொன்டிங்கும் இரண்டாவது விக்கெட்டுக்காக 121 ஓட்டங்களைப் பெற்றனர்.
பொன்டிங் 71 ஒட்டங்களைப் பெற்ற நிலையில்ல் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சைமன்ட் கட்டிச் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைக்கல் கிளார்க் 14 ஓட்டங்களுடனும் மைக் ஹஸி 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் ஸஹீர்கான் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 69 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அவுஸ்திரேலிய அணியின் சார்பில் நோர்த், பெய்ன், ஹெளரிட்ஸ், ஜோன்ஸ்ன், ஹில்பென்ஹாஸ், பொலின்ஜர் ஆகியோர் துடுப்பெடுத்தாட உள்ளனர்.
இந்திய அணியின் சார்பில் ஷேவாக், காம்பிர், திராவிட், டெண்டுல்கர், லஷ்மன், ரெய்னா, டோனி, ஹர்பஜன், இஷாந்த் சர்மா, ஸஹீர்கான், ஓஜா ஆகியோர் இப்போட்டியில் விளையாடுகின்றனர்.
24 minute ago
28 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
5 hours ago
6 hours ago