2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவுடனான முதல் டெஸ்ட்டில் ஆஸி. வலுவான நிலை

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. மொஹாலியில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு 216 ஓட்டங்கள் தேவையான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 55 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 428 ஓட்டங்களையும் இந்தியா 405 ஓட்டங்களையும் பெற்றன.

போட்டியின் 4 ஆவது நாளான இன்று, இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் 192 ஓட்டங்களுக்குள் சுருட்டினர். ஸஹீர்கான், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனால் இந்திய அணி 216 ஓட்டங்கள் மாத்திரமே தேவையான நிலையில் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

ஆனால்இ அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் பென் ஹில்பென்ஹாஸ் மூன்று முக்கிய விக்கெட்டுகளை சொற்ப ஓட்டங்களுக்குள் வீழ்த்தியதால் இந்திய அணி பெரும் சரிவை எதிர்நோக்கியுள்ளது.

கௌதம் காம்பீர்இ சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாமலும் வீரேந்தர் ஷேவாக் 17 ஓட்டங்களுடனும் ஹில்பென்ஹாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதேவேளை ராகுல் திராவிட் டக் பொலின்ஜரின் பந்துவீச்சில் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்.

இன்றைய ஆட்டமுடிவின்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஹில்பென்ஹாஸ் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சச்சின் டெண்டுல்கர் 10 ஓட்டங்களுடனும் ஸஹீர்கான் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு இன்னும் 161 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. நாளை இப்போட்டியின் கடைசி நாள் ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .