Super User / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கும் கூடைப்பந்தாட்ட வீரர் சஷா வுஜாசிற்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
26 வயதான சஷா வுஜாசிக், யுகோஸ்லாவியாவை பிறப்பிடமாகக் கொண்டவர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் கழகத்திற்காக அவர் விளையாடுகிறார்.
வுஜாசிக்கும் 23 வயதான மரியா ஷரபோவாவும் சுமார் ஒரு வருட காலமாக காதலித்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றைப் பார்வையிடுவதற்கு இருவரும் முதல் தடவையாக இணைந்து வந்தனர்.
அமெரிக்காவையே ஷரபோவா வசிப்பிடமாக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .