Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக பகிரங்க நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்ற அமெரிக்க வீரர் பிரான்சிஸ் கிறிப்பென், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று போட்டியொன்றில் பங்குபற்றிகொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்தார்.
26 வயதான கிறிப்பென், 2009 ஆம் ஆண்டு ரோமில் நடந்த உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 10 கிலோமீற்றர் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். அத்துடன்,
இவ்வருடம் கனடாவில் நடைபெற்ற உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 5 கிலோமீற்றர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தடாகங்களில் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் 800 மீற்றர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் இரு தடவை அமெரிக்கச் சம்பியனாகிய கிறிப்பென், 2006 ஆம் ஆண்டு திறந்த நீர்நிலைகளில் நடைபெறும் நீச்சல் போட்டிகளுக்கு மாற ஆரம்பித்தார்.
2012 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறுவதன் மூலம் ஒலிம்பிக் பகிரங்க நீச்சல் போட்டிகளில் பதக்கம்பெற்ற முதல் அமெரிக்கர் எனும் சாதனைக்குரியவராகுதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று துபாயில் நடைபெற்ற 10 கிலோமீற்றர் போட்டியின்போது அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இம்மரணம் குறித்த விசாரணைகள் நடைபெறுவதாக சர்வதேச நீர்நிலை விளையாட்டுக்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், "கிறிப்பென்னின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அமெரிக்க நீர்நிலை விளையாட்டுச் சங்கத்திற்கும் சர்வதேச நீர்நிலை விளையாட்டுக்கள் சம்மேளனமும் முழு நீச்சல் விளையாட்டுச் சமூகமும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றன" எனவும் மேற்படி சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கிறிப்பென்னின் குடும்பம் நீச்சல் உலகில் பிரபல்யமானதாகும். கிறிப்பென்னின் மூத்த சகோதரியான மெடி, 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பங்குற்றினார். அவரின் இளைய சகோதரிகள் இருவர் அமெரிக்க பல்கலைக்கழக நீச்சல் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.
துபாயில் நடைபெற்ற உலக திறந்த நீச்சல் போட்டிகளில் பங்குபற்றிய போட்டியாளர்களும் நண்பர்களும் கிறிப்பென் உயிரிழந்த இடத்திற்குச்சென்று அஞ்சலி செலுத்தினர்.
faiz Monday, 25 October 2010 04:17 PM
ivarin ilappu mulu ulahukkumana ilappu...we miss u....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago