2020 நவம்பர் 28, சனிக்கிழமை

உலகக் கிண்ணப் புகழ் ஒக்டோபஸ் கொலை செய்யப்பட்டதா?

Super User   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின்போது மிகத் துல்லியமான எதிர்வு கூறல்களைக் கூறியதால் உலகக் புகழ்பெற்ற போல் எனும் ஒக்டோபஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சீன திரைப்பட இயக்குநர் ஒருவர் கூறியுள்ளார்.

இரண்டரை வயதான மேற்படி ஒக்டோபஸ் ஜேர்மனியிலுள்ள நீரியல் பூங்காவொன்றில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை இயற்கையாக உயிரிழந்து காணப்பட்டதாக இப்பூங்காவின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால்,  3 மாதங்களுக்கு முன்னரே அது கொல்லப்பட்டிருக்கலாம் என சீனாவைச் சேர்ந்த விவரணப் பட இயக்குநரான ஜியாங் ஸியாவோ கூறியுள்ளார்.


உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜேர்மன் அணியை ஸ்பெய்ன் அணி  வெல்லும் என்பதை மேற்படி ஒக்டோபஸ் சரியாக எதிர்வுகூறியது. இதனால் ஜேர்மன் கால்பந்தாட்ட ரசிகர்கள் பலர் மேற்படி ஒக்டோபர் மீது கடும் ஆத்திரமடைந்ததுடன் அதற்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.

இந்நிலையில் 'உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இரு நாட்களுக்கு முன்பாக – ஜூலை 9 ஆம் திகதி  போல் ஒக்டோபஸ் கொலை செய்யப்பட்டு அதன் தொட்டியில் வேறொரு ஒக்டோபஸ் வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என நான் 69-79 சதவீதம் நம்புகிறேன். ஜேர்மனியர்கள் இம்மரணத்தை இவ்வளவு நாள் மூடிமறைத்து எம்மை முட்டாளாக்குகின்றனர்' என  ஜியாங் ஸியாவோ கூறியுள்ளார்.

மேற்படி ஒக்டோபஸ் ஸ்பெய்னில் அதிக செல்வாக்குப் பெற்றிருந்ததுடன் அதை வாங்குவதற்கும் ஸ்பானிய நகரமொன்று முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .