2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இரண்டாவது ஊக்கமருந்து சோதனையிலும் மஞ்சு வன்னியாரச்சி தோல்வி

Super User   / 2010 நவம்பர் 14 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுநலவாய குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி இரண்டாவது ஊக்கமருந்து சோதனையிலும் தோல்வியுற்றுள்ளார்.

அவரின் சிறுநீர் மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையின்போது அவர் நன்ட்ரோலின் எனும் ஊக்கமருந்து பயன்படுத்தியமைக்கான அறிகுறிகள் தென்பட்டன. அதையடுத்து சிறுநீரின் இரண்டாவது மாதிரியில் மீண்டும் சேதனை நடத்தப்பட்டது. இச்சோதனையிலும் அவர் தோல்வியுற்றுள்ளார்.

வன்னியாரச்சி இரு ஊக்கமருந்து சோதனைகளிலும் தோல்வியடைந்துள்ளதால் விதிகளின்படி, அவர் போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்படுவதுடன் அவரின் பதக்கங்களும் பறிக்கப்படலாம்.

எனினும் இச்சோதனை பெறுபேற்றை இலங்கை ஆட்சேபிக்கும் என மஞ்சு வன்னியாரச்சியின் சட்டத்தரணி கலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முறையான விதிகளின்படி இச்சோதனை நடைபெறவில்லை என அவர் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X