Super User / 2010 நவம்பர் 18 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீஃபா), தனது நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் இருவர் உட்பட கால்பந்தாட்ட அதிகாரிகள் அறுவருக்கு ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக, கால்பந்தாட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 வருடகாலம் வரையான தடையும் அபராதமும் விதித்துள்ளது.
அத்துடன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இருவரும் 2018, மற்றும் 2022 ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் நாடுகளை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பங்குபற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஃபீஃபா ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் கிளாடியோ சுல்ஸெர், சுவிட்ஸர்லாந்து தலைநகர் சூரிச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
நைஜீரியாவைச் சேர்ந்த அமோஸ்அடமு, சேர்ந்த ரெனோல்ட் டமூரி ஆகிய இருவரும் மேற்படி வாக்களிப்பில் தமது வாக்குகளை விற்பதற்கு முன்வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளில் இவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டதால் மேற்படி தடை விதிக்கப்பட்டதா ஃபீஃபா இன்று வியாழக்கிழமை அறிவித்தது.
இவ்வாக்கெடுப்பு டிசெம்பர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.பொதுவாக ஃபீஃபா நிறைவேற்றுக்குழுவின் 24 அங்கதத்வர்கள் இதில் வாக்களிப்பர். ஆனால் இம்முறை 22 பேரே வாக்களிப்பில் பங்குபற்றவுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து, ரஷ்யா என்பன தனித்தனியாக விண்ணப்பித்துள்ளதுடன் ஸ்பெய்ன்- போர்த்துகல் மற்றும் பெல்ஜியம்- நெதர்லாந்து என்பன கூட்டாக விண்ணப்பித்துள்ளன.
2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கட்டார் ஆகியன விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 15 முதல் 17 வரை சூரிச்சில் நடைபெற்ற பீபா ஒழுக்காற்றுக்குழு கூட்டத்தின்போது மேற்படி அதிகாரிகளுக்கு தண்டனையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
தடை விதிக்கப்பட்ட அதிகாரிகள் குறித்த காலப்பகுதியில் கால்பந்தாட்டத்தில் அல்லது கால்பந்தாட்ட நிர்வாக அல்லது வேறேதும் நடவடிக்கைகளிலோ ஈடுபட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
32 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
47 minute ago
2 hours ago