Super User / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூஸிலாந்து அணியுடனான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இன்று பெங்களுரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற 4 ஆவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 315 ஓட்டங்களைக் குவித்தது.
ஜேம்ஸ் பிராங்க்ளின் 69 பந்துவீச்சுகளில் 3 சிக்ஸர், 12 பௌண்டரிகள் உட்பட 98 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் யூஸுப் பதான் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 108 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 4 ஆவது விக்கெட்டை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.
188 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 5 ஆவது விக்கெட் வீழ்ந்தது. எனினும் அதன்பின் ஜோடி சேர்ந்த யூஸுப் பதானும் சௌரப் திவாரியும் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
யூஸுப் பதான் 96 பந்துவீச்சுகளில் 7 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகள் அடங்கலாக 123 ஓட்டங்களைக் குவித்தார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் யூஸுப் பதானின் முதலாவது ஆவது சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்திய அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. யூஸுப் பதான் இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
5 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இந்திய அணி 4-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.
10 minute ago
20 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
40 minute ago