Super User / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸிம்பாப்வே அணியுடனான 5 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ் அணி இத்தொடரின் வெற்றியை தனதாக்கியுள்ளது.
இன்று நடைபெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 188 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் முதல் 3 விக்கெட்டுகளும் 21 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. அணித்தலைவர் டடேண்டா தைபு 64 ஓட்டங்களைப் பெற்றார்.
ஸகிப் அல் ஹசன் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மஸ்ரபி மோர்ட்டஸா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இம்ரான் காயிஸ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் 96 பந்துவீச்சுகளில் 95 ஓட்டங்களைப் பெற்றார். 7 சிக்ஸர்கள் 4 பெண்டரிகளையும் அவர் விளாசியமை குறிப்பிடத்தக்கது.
ஜுனைத் சித்தீக் 56 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் அணி 43 ஓவர்களில் விக்கெட்டுகளை 4 இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இத்தொடரின் 4 ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இத்தொடரில் 3-1 விகிதத்தில் பங்களாதேஷ் அணி வெற்றியீட்டியுள்ளது.
5 ஆவது போட்டியின் சிறப்பாட்டக்காரராக தமீம் இக்பாலும் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக அப்துர் ரஸாக்கும் தெரிவாகினர்.
பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக இரு ஒருநாள் சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. இதற்கு முன் நியூஸிலாந்துடனான தொடரிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025