2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தேசிய கால்பந்தாட்ட லீக் இறுதிப்போட்டியில் பருத்தித்துறை அணி

Super User   / 2010 டிசெம்பர் 19 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் கால்பந்தாட்ட லீக்ககளுக்கு இடையே நடத்திய சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட முதல் தடவையாக வட மாகாணத்தைச் சேர்ந்த பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக் அணி தெரிவு செய்யப்பட்டுளள்து.

கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில் இன்று பிற்பகல்; இடம் பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பருத்தித்துறை  லீக்கும் நீர்கொழும்பு லீக் அணியும் மோதிக்கொண்டன.

ஆட்டத்தின் 18 ஆவது நிமிடத்தில் பருத்தித்துறை அணி வீரர் பிறேம் குமார்  தனது முதலாவது கோலை அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

ஆனாலும் சளைக்காது விளையாடிய நீர் கொழும்பு லீக் அணி 30 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றதன் மூலம் போட்டி சமநிலையை அடைந்தது.   இந் நிலையில் முதல் பாதி ஆட்ட நேரம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 38 ஆவது நிமிடத்தில் பருத்தித்தறை லீக்கைச் சேர்ந்த அரவிந்தன்  தனக்கு கடைத்த பந்தை உரிய முறையில் முன் நகர்த்தி அடித்து கோலைப் பெற்றுக் கொண்டார்.   42 ஆவது நிமிடத்தில் அரவிந்தன் மற்றொரு கோலை அடித்தார்.

ஆட்ட நிறைவில் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக் அணி3:1 என்ற விகிதத்தில் நீர் கொழும்பு கால்பந்தாட்ட லீக் அணியை வென்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.        
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--