2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அணித் தலைவர் நியமன தாமதத்தினால் வீரர்களிடையே பிரிவிணை: இன்ஸமாம் குற்றச்சாட்டு

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான பாகிஸ்தான் அணிக்கு தலைவரை நியமிப்பதற்கு தாமதிப்பதன் மூலம் அணியின் வீரர்களிடையே கிரிக்கெட் சபை அதிகாரிகள் பிரிவிணையை ஏற்படுத்துவதாக முன்னாள் அணித்தலைவர் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 19 முதல் ஏப்ரல் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் 14 அணிகளில் பாகிஸ்தான் மாத்திரமே இதுவரை அணித்தலைவரை  நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

இத்தாமதம் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அணியின் தயார்படுத்தல்களை பாதிப்பதாகவும் அணியின் வீரர்களிடையே பிரிவிணையை ஏற்படுத்துவதாகவும் இன்ஸமாம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இச்சுற்றுப்போட்டிக்காக 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த வாரம் நியமித்தது. ஆனால், அணித்தலைவர் ஒருவரை நியமிக்கவில்லை. தற்போதைய ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் சஹீட் அவ்ரிடிக்குப் பதிலாக டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்ப உல் ஹக் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அணித்தலைவராக நியமிக்கப்படலாம் என ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--