Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 25 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரிடமிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் அணியி;ன் முன்னாள் தலைவரும் முன்னாள் பயிற்றுநருமான ஜாவிட் மியாண்டட் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர்கள் ஆடுகளத்தில் தாம் காட்டும் திறமையை தமக்காக பேச விடுவதைவிட ஊடகங்களிடம் தமது திட்டங்கள் குறித்து வீறாப்பாக பேசுவதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என மியாண்டட் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
'தாம் என்ன செய்யப் போகிறார்கள் என்று சில வீரர்கள் கூறுவதை நாம் பத்திரிகைகளில் வாசிக்கிறோம். ஆனால் மைதானத்தில் அவர்கள் சொன்னதுபோல் நடைபெறுவதில்லை. இது நாட்டிற்கு ஏமாற்றமளிக்கிறது.
அவ்வீரர்களை போட்டிகள் மீது கவனம் செலுத்துமாறும் திறமையை அதிகரித்துக் கொள்ளுமாறும் ஒவ்வொரு போட்டியையும் முக்கியமானதாக கருத்திற் கொள்ளுமாறும் நான் நான் ஆலோசனை வழங்குகிறேன்.
அவர்கள் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் அற்புதமான கிரிக்கெட் வரலாற்றைக் கொண்டுள்ளார்.
துடுப்பாட்டத்தில் சதத்திற்கு மேல் சதம் குவிக்கிறார். ஆனால், அவர் தனது திறமைகள், சாதனைகள் குறித்து பேசுவதை நாம் கேட்டதில்லை. அவர் முறையான தொழிற்சார் கிரிக்கெட் வீரர் அவரிடமிருந்து எமது வீரர்களில் சிலர் பாடம் கற்றுக்கொள்ள முடியும்' என தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் தற்போதைய தலைவர் சஹீட் அவ்ரிடி குறித்து ஜாவிட் மியாண்டட் கூறுகையில், அவ்ரிடி ஒரு வீரராக முன்னுதாரணமாக செயற்பட்டு அணியை முன்னேற்ற வேண்டும். அவர் திறமைகள் கொண்ட வீரர். ஆனால் அவற்றை உரிய நேரங்களில் முறையாக பிரயோகிக்க வேண்டியுள்ளது. அவர் தற்போது விளையாடும் பாணியில் விளையாடக்கூடாது. ஓர் அணித் தலைவர் எப்படி செயற்பட வேண்டும் என்பதற்கு இம்ரான் கான் முன்னுதாரணமாவார்.' என்றார்.
26 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago