2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

உலக கிண்ண அரங்குகளுக்கு இசைக்கருவிகள், பதாகைகள் எடுத்துச் செல்ல தடை

Super User   / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அரங்குகளுக்கு பதாகைகள், இசைக்கருவிகள், கண்ணாடி போத்தல்கள், பட்டாசுகள், லேசர் ஒளி விளக்குகள், கூரான உபகரணங்கள், கத்திகள், தொழில்சார் ரீதியான கமெரா, மதுபானம் என்பன எடுத்துச் செல்லப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில்  பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய இத்தகவலை தெரிவித்தார்.

அதேவேளை இச்சுற்றுப்போட்டியின்போது விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

உலக கிண்ண போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்குச் செல்லும் பாதைகள் அவ்வப்போது பொலிஸாரால் மூடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.  (சுபுன் டயஸ்)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--