Super User / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் வின்சன்ட் பர்ன்ஸ் தனது நாய்க்கு சச்சின் என பெயர் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர்தான் வின்சன்ட் பர்ன்ஸின் அபிமான வீரர். ஆதனால் தனது நாய்க்கு சச்சின் என பெயர் சூட்டினாராம் வின்சன்ட்.
தற்போது உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக தென்னாபிரிக்க அணியுடன் பல நகரங்களுக்கும் பயணம் செய்வதால் சச்சினை (நாயைத்தான்) ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்கிறார் வின்சன்ட்.
'என்னால் நாயை எல்லா இடங்களுக்கும் கொண்டுவர முடியாது. ஆனால் அதனை வீட்டில் பார்த்துக்கொள்வதற்கு பலர் இருக்கிறார்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனது அபிமான துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் குறித்து அவர் கூறுகையில், ' அவர் ஒரு சுப்பர்மேன். எதையும் சாதிக்கக்கூடியவர்' எனக் கூறியுள்ளார்.
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025