2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சர்வதேச மாநகரங்களுக்கிடையிலான கபடி போட்டியில் கிழக்கு மாகாண கபடிக் கழகத்திற்கு மூன்றாமிடம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா, அப்துல் சலாம் யாசீன்)

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற  சர்வதேச மாநகரங்களுக்கிடையிலான கபடி சுற்றுப்போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாண கபடிக் கழகம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

கோலாலம்பூர் பெட்மின்டன் மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றது.

நேபால், மலேசியா, இந்தியா, இலங்கை, பூட்டான் ஆகிய 5 நாடுகளினதும் 18 நகரக் கழகங்கள் போட்டியிட்டன. கிழக்கு மாகாண குழுவை கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் உதவிப் பணிப்பாளர் எஸ்.ஏ.ஜஸ்டின் ஆகியோர் மலேசியாவுக்கு அழைத்து சென்றனர்.

டில்லி கபடி அணிக்கும் இலங்கை கிழக்கு மாகாண அணிக்குமிடையில் இடம்பெற்ற மூன்றாம் இடத்துக்கான போட்டியில் கிழக்கு மாகாண அணி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இதேவேளை, பெண்களுக்கான கபடி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற சென் சூ சிட்டி அணிக்கான கிண்ணத்தை கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர் வழங்கினார். கிழக்கு மாகாண கபடி அணிக்கான கிண்ணத்தை மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏ.கோகிலம்பிள்ளை வழங்கி வைத்தார். இப்போட்டிகள் கடந்த 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி மலேசியாவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிழக்கு மாகாண கபடி அணி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--