2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மேற்கிந்திய அணியில் புதிய வீரரை சேர்க்க ஐ.சி.சி. அனுமதி

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக கிண்ணப் போட்டிகளுக்கான மேற்கிந்திய அணியில் காயமடைந்துள்ள ட்வைன் பிராவோவுக்கு பதிலாக தேவேந்ர பிஷுவை சேர்ப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அனுமதி வழங்கியுள்ளது.

25 வயதான பிஷு கயானாவை  பிறப்பிடமாகக் கொண்ட சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இதுவரை அவர் மேற்கிந்திய அணிக்காக விளையாடவில்லை. 21 முதல் தரப் போட்டிகளிலும் 12 உள்ளூர் 20 ஓவர் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். கடந்த வருடம் மேற்கிந்திய ஏ அணிக்காகவும் அவர் விளையாடினார்.

இச்சுற்றுப்போட்டியில் மாற்றீடு செய்யப்படும் 11 ஆவது வீரர் பிராவோ ஆவார். மேற்கிந்திய அணியில் ஏற்கெனவே அட்ரியன் பாரத், கார்ல்டன் போஹ் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர்.

உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களை மாற்றுவதற்கு ஐ.சி.சியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--