2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

செரீனா வில்லியம்ஸுக்கு அவசர சத்திரசிகிச்சை

Super User   / 2011 மார்ச் 03 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான செரீனா வில்லியம்ஸின் நுரையீரலில் குருதிக்கட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அவசர சத்திரசிகிச்சைக்கு உள்ளாப்பட்டுள்ளார்.

29 வயதான செரீனாவு கடந்த திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு  சத்திரசிகிச்சை முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் விம்பிள்டன் பகிரங்கப் போட்டியில் சம்பியனாகியதன் பின்னர் செரீனா போட்டிகள் எதிலும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் சம்பியனாகியதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தொன்றில் கண்ணாடித் துண்டொன்று அவரின் காலில் குத்தியமையே இதற்குக் காரணம்.

இந்நிலையில் அவருக்கு குருதிக்கட்டி காரணமாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிஷ்டவசமாக அனைத்தும் நேரகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. செரீனா தற்போது வீட்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது கடுமையானதும் அச்சமூட்டுவவதுமான அனுபவம் என செரீனா அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தான் மீண்டும் எப்போது போட்டிகளில் பங்குபற்ற முடியும்என உறுதியாகக் கூற முடியாவிட்டாலும் கோடைப்பருவத்தில் போட்டிகளுக்குத் திரும்ப முடியும் என நம்புவதாக செரீனா தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான இவர் ஏற்கெனவே 13 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் தற்போதைய முதல் நிலை வீராங்கனை கரோலின் வொஸ்னியாக்கி, இரண்டாம் நிலை வீராங்கனை கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் உட்பட பலர் செரீனா விரைவில் குணமடைவதற்கு வாழ்த்துவதாக தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .