Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) டுவென்டி 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமானது.
சென்னையில் நடைபெற்ற கோலகலமான வைபவமொன்றில் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் ஷசாங் மனோகர் உத்தியோகபூர்வமாக சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்தார். 4 ஆவது தடவையாக இச்சுற்றுப்போட்டி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது போட்டியில் எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இம்முறை ஐ.பி.எல். போட்டிகளில் மொத்தமாக 10 அணிகள் பங்குபற்றுகின்றன.
குழு 'ஏ' இயில் டெக்கான் சார்ஜஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை இன்டியன்ஸ், புனே வாரியர்ஸ் இன்டியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழு 'பி' இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ், ரோயல் சலெஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ரோயல்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
shahin Saturday, 09 April 2011 04:02 PM
சூதாட்ட முதலைகளின் அந்தபுரம் கிரிக்கெட்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago