2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி சாதனை

Super User   / 2011 ஜூன் 09 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

இலங்கை மெய்வன்மைச் சங்கம் நடத்தும் கனிஷ்ட பிரிவு தேசிய மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி ச.தனுஷா புதிய அகில இலங்கை ரீதியிலான  சாதனையொன்றை படைத்துள்ளார்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ மெய்வன்மை அரங்கில் நடைபெறும் இப்போட்டிகளின் முதல்நாளான இன்று வியாழக்கிழமை தனுஷா 3.00 மீற்றர் உயரம் பாய்ந்து இச்சாதனையை படைத்தார். இதற்குமுன் 2009 ஆம் ஆண்டு ஆன் பியுமாலி 2.90 மீற்றர் பாய்ந்தமையே கனிஷ்ட பிரிவு தேசிய மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளில் முந்தைய சாதனையாக இருந்தது.

 2009 ஆம் ஆண்டு கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 2.81 மீற்றர் பாய்ந்து தேசிய சாதனையொன்றை தனுஷா படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .