2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

பாதுகாப்புப் படைகளில் இணையும் இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகள்

Super User   / 2011 ஜூன் 13 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளில் பெரும்பாலானோர் இலங்கை பாதுகாப்புப் படைகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.  

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு அனுசரணையாளரைத் தேடுவதற்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் சபை) முயற்சியில் அதிக வெற்றிகள் கிடைக்காத நிலையில் அவ்வீராங்கனைகள் பாதுகாப்புப் படைகளில் இணைந்துள்ளனர்.

இவ்வீராங்கனைகள் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் எதிலும் பங்குபற்ற மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையில் தான்  விரைவில் சேர்க்கப்படுவார்  என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சசிகலா சிறிவர்தன பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளர்.  

"இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் குழாமிலுள்ள அணியிலுள்ள 30 வீராங்கனைகளும் விரைவில் பாதுகாப்புப் படைகளில் சேர்க்கப்படுவர் என நான் நம்புகிறேன். ஏற்கெனவே 90 சதவீதமானோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 15 பேர் விமானப்படையிலும் 13 பேர் கடற்படையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர் " என சசிகலா சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வீராங்கனைகள் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகளில் இடம்பெறுவர். அதேவேளை, தேசிய அணியின் பயிற்சிகளில் பங்குபற்றுவதற்கும் சுதந்திரம் உண்டு என அவர் கூறினார்.

தொடரும் முயற்சி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு நிரந்தர அணுசரணையாளர் ஒருவரை தேடும்  முயற்சி வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் ஒவ்வொரு சுற்றுப்போட்டியின் அடிப்படையில் அனுசரணையாளரை தேடும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இறுதியாக அவ்வணி பங்குபற்றிய இரு போட்டிளிலும் மொபிடெல் நிறுவனம் இலங்கை அணிக்கு அனுசரணை வழங்கியதாக சசிகலா சிறிவர்தன தெரிவித்தார்.

இவ்வணிக்கு நிரந்தர அனுசரணையாளரை தேடும் முயற்சி தொடர்ந்து வருவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் டெய்லி மிரர் பத்திரிகையின் விளையாட்டுத்துறை ஆசிரியரான சன்னக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போலல்லாமல் பெண்கள்அணி ரசிகர் தளமொன்றை ஈர்க்காதமையே பெண்கள் கிரிக்கெட் துறை பாதிக்கப்படுவதாக கூறினார்.

அதேவேளை இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநரும் முன்னாள் தலைவருமான மாவன் அத்தபத்து கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை ஆண்கள் கிரிக்கெட்டிலும் 1996 ஆம் ஆண்டில் இருந்த அணிக்கும் (உலக்கிண்ணத்தை வெல்வதற்குமுன் ) 2011 ஆம் ஆண்டின் அணிக்கும்  பெரும் வித்தியாசம் இருந்ததாக அவர் கூறினார்.

'1996 ஆம் ஆண்டு இவ்வணியில் ஒரு தொழிற்சார் வீரர்கூட இருக்கவில்லை என நான் எண்ணுகிறேன் 'என அவர் தெரிவித்துள்ளார். (-பிபிசி சிங்கள சேவை)
 


  Comments - 0

  • bis Tuesday, 14 June 2011 07:25 PM

    ஓமோம் இப்பவெல்லாம் மிகவும் பாதுகாப்பான தொழில் தானே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X