Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூன் 14 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்த்ய சேனாநாயக்க, சந்துன் ஜயசேகர)
இலங்கை கிரிக்கெட் சபையிலுள்ள (ஸ்ரீலங்கா கிரிக்கெட்) கிரிக்கெட் உலகக்கிண்ண அலுவலகத்திலிருந்து காணாமல் போன கணினி ஹார்ட் டிஸ்குகளில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடர்பான கணக்குத் தணிக்கை அறிக்கை உட்பட பல ஆவணங்களும் இருந்ததாக 2011 உலகக் கிண்ணத் தொடரின் சுற்றுப்போட்டி பணிப்பாளர் சுராஜ் தாந்தெனிய டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடர்பான சர்வதேச மற்றும் உள்ளூர் விபரங்கள் பல , இரு ஹார்ட் டிஸ்குகளில் இருந்ததாக அவர் கூறினார்.
எனினும் அனைத்து ஆவணங்களினதும் காப்பு நகல் (பெக் அப்) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வசம் இருப்பதால் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.
இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து விசாரிப்பதற்காக பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்) அழைப்பாணை விடுத்துள்ள நிலையில் மர்மமான வகையில் இந்த கணினி ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போயுள்ளதாக 'கோப்' தலைவரான சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமுறைக்கேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு ஜூலை முதல் வாரத்தில் விசாரணைக்கு சமுகமளிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago